வார்த்தைகளை அளந்து பேசுவதுபோல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும்.
ராசியாதிபதி செவ்வாய், புதன் இருவரும் ராசிக்கு 6ல் சஞ்சாரம் செய்வது எல்லா இடங்களிலும் மரியாதையையும் கௌரவமும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்துலகில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்கள் செய்யும் காரியங்களுக்கும் எல்லா தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
சந்திராஷ்டமம்:
13, 14 போன்ற தேதிகளில் வாகனத்தில் வேகமாகப் போகாதீர்கள்.
அதிர்ஷ்ட நாட்கள்:
9, 18, 27.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருகனை வழிபட மனக்கஷ்டம் நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment