மற்றவர்கள் கூறும் குறைகளைப்பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்கள் நீங்கள். இந்த மாதம் எதிலுமே மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.
ராசியாதிபதியால் திடீர் உடல்நல பாதிப்புகள் உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். சனியின் சஞ்சாரம் பணவரவை அதிகரிக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்துக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியது வரும். பெண்களுக்கு கௌரவமும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பது வெற்றிக்கு உறு
துணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்:
11, 12 போன்ற தேதிகளில் இரவு நேரங்களில் வெகுதூரம் வாகனத்தை சுயமாக நீங்கள் இயக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்:
6, 15, 24.
பரிகாரம்:
குல தெய்வத்தைப் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்..
0 comments:
Post a Comment