மே மாத ராசி பலன்கள் - கன்னி


எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு சொல்வீர்கள். இந்த மாதம் நிம்மதியும் சுகமும்  அதிகமாகும். ராசியாதிபதியான புதன் ராசிக்கும்
எட்டில் செவ்வாயுடனும் சேர்ந்து சஞ்சாரம் செய்வது புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டியது  வரலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். பலவகையிலும் பிறரின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக  பொறுப்புகள் ஏற்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வீண்பழி வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்களின் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண அனுபவப்பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

சந்திராஷ்டமம்: 

8, 9, 10 போன்ற தேதிகளில் பயணம் செய்யும் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  

அதிர்ஷ்ட தேதிகள்: 

5, 14, 23.

பரிகாரம்: 

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment