எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை
உண்டாகும். ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரம் பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகப்படுத்தும். ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் நலம் சீரடையும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைப் நீங்கி சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வித் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். விஐபிகள் உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்:
6, 7 போன்ற தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்:
1, 10, 19, 28.
பரிகாரம்:
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும் சிவனையும் வணங்கி வர, மனக்கவலை அகலும்..
0 comments:
Post a Comment