எதிலும் நேர்மையும் வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் தலைமைப் பண்பும் உடையவர்கள் நீங்கள். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். திடீர்
பயணங்கள் செல்வீர்கள். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதன் சஞ்சாரத்தால் தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 10ல் சஞ்சரிப்பதால் எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பரிசுகள் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்:
4, 5, 31 போன்ற தேதிகளில் புதிய தொழில் தொடங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்:
2, 4, 11, 13, 20, 22, 29, 31.
பரிகாரம்:
காஞ்சி காமாட்சியை வணங்கி வர, காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதியும் கிடைக்கும்.
0 comments:
Post a Comment