மே மாத ராசி பலன்கள் - மிதுனம்


அபார அறிவாற்றலும் ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்த்துச் செய்யும் திறமைமிக்கவர்கள் நீங்கள். இந்த மாதம் ராசியாதிபதியான புதன் ராசிக்கு 11ம் அதிபதியான செவ்வாயுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது
எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். குழப்பங்கள் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்திலிருந்து நல்ல சேதி வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் கூடும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். புதிய ஆபரண சேர்க்கை உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: 

2, 3, 29, 30 போன்ற தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 

5, 14, 23.

பரிகாரம்: 

வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி, தீபமேற்றி வணங்க, வெற்றிகள் குவியும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment