லட்சியத்தில் உறுதியோடு இருப்பீர்கள். அதேசமயம் எதிலுமே அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் வீண் செலவும் அலைச்சலும் உண்டாகும். ராசிக்கு 12ல் செவ்வாயும் புதனும் சேர்ந்து
சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலுமே கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும்போது எச்சரிக்கை தேவை. தீ, ஆயுதம் இவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனக்கவலை ஏற்படலாம். மாணவர்களின் மேற்கல்விக்காக போராட வேண்டியிருக்கும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்:
1, 27, 28 போன்ற தேதிகளில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.
அதிர்ஷ்ட நாட்கள்:
6, 15.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை பூஜித்து வர, கடன் பிரச்னை தீரும்..
0 comments:
Post a Comment