மே மாத ராசி பலன்கள் - மேஷம்


எதிலும் துணிவோடு முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள் நீங்கள். எனவே, பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கும் நேரமும் இதுதான். இந்த மாதம்  ராசியாதிபதி செவ்வாய் ராசியில், சூரியன், புதன் மற்றும் கேதுவுடன் சேர்ந்து
சஞ்சாரம் செய்வதால் அவசர அவசரமாக எதையும் செய்யத் தோன்றும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது  வளர்ச்சிக்கு உதவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களோடு தன்மையாக பேசுவது நல்லது.  கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படக் கூடும் பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். பெண்கள் நிதானமாக  செயல்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் எதிர்கால கல்வித் தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.  நண்பர்களிடம் பேசும் போது வார்த்தையில்  கடுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம்

25, 26ம் தேதிகளில் இரவுப்பயணத்தை தவிர்க்க வேண்டும். 

அதிர்ஷ்ட நாட்கள்: 

9, 18, 27. 

பரிகாரம்: 

திருச்செந்தூர் முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment