உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண்
பிரச்னையில் சிக்கிக் கொள்ளலாம். ராசிக்கு இரண்டில் செவ்வாயும் புதனும் சஞ்சாரம் செய்வதால் திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் வீண் அலைச்சலும் உண்டாகும். பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். படிப்பிலும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்:
22, 23, 24 போன்ற தேதிகளில் புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்:
3, 12, 21, 30.
பரிகாரம்:
நவகிரக குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி வழிபட, செல்வம் சேரும்.
0 comments:
Post a Comment