சொல்வன்மை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் இப்போது 3-ஆம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்கிறார். 28.5.13 முதல் 12.6.14 வரை, உங்களின் விரய-பாக்கிய ஸ்தானாதிபதியான குரு, 3-ல் மறைவதால், எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. எடுத்த காரியங்களை முடிக்க, அதிக முயற்சி தேவை. முக்கிய அலுவல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தினர் கருத்துக்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் வந்தாலும் சேமிக்க இயலாமல் செலவுகள் துரத்தும். வசதி-வாய்ப்புகளைக் கண்டு தவறானவர்களுடன் நட்புகொள்ள வேண்டாம். உணவுக்
கட்டுப்பாடு, மருந்து உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை அவசியம். உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பி-கள் நட்பாவர். தம்பதிக்குள்
கட்டுப்பாடு, மருந்து உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை அவசியம். உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பி-கள் நட்பாவர். தம்பதிக்குள்
சச்சரவுகள் எழுந்தாலும் அந்நியோன்யம் குறையாது. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. கடன் கட்டுக்குள் வரும். தந்தையின் உடல் நலன் சீராகும். அவருடனான கருத்துமோதல் விலகும். வழக்கு நெருக்கடிகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால், கல்வியாளர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் மிருகசீரிட
நட்சத்திரத்தில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபம்தரும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு, மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை வந்துபோகும்.
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு, மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை வந்துபோகும்.
29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை,
உங்களின் பாக்கிய-விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குரு செல்கிறார். நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும்.
உங்களின் பாக்கிய-விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குரு செல்கிறார். நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசத்திலும், 27.1.14
முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் குரு வக்ர கதியில் செல்வதால்,
வருமானம் உயரும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும். புது சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவது, மாற்றுவது குறித்த முயற்சிகளில் இறங்குவீர்கள். பங்குதாரர்கள், தங்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவர். உணவு, டிராவல்ஸ்,

பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற இலக்கை அடைய முடியாமல் ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். பணிச்சுமை
அதிகரித்தாலும் சளைக் காமல் செய்து முடிப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப்பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல வரன் அமையும். மாணவர்கள், கூடா நட்பைத் தவிர்க்கவும். விரும்பிய கல்வி

நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத் துறையினர்,
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள் சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள் சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பணிச் சுமையை தந்தாலும், மனப்பக்குவத்தால் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பழநி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள். குருவருள் கூடி வரும்.
0 comments:
Post a Comment