உதாரணப் புருஷராக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ல் அமர்வதால், எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் அமைதி தவழும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். வீண் பதற்றம், பயம் நீங்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். எதிர்மறை எண்ணங்கள், கூடா நட்பு விலகும். பேச்சில் கனிவு பிறக்கும்.
குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நல்லவர்களது நட்பும், ஆலோசனைகளும் புதிய பாதையில் உங்களைப் பயணிக்க வைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
சோர்வு நீங்கும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால் மூச்சுத் திணறல், சளித்
தொந்தரவு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 10-வது
வீட்டையும் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். தன்னார்வ தொண்டு
நிறுவனங்களில் பதவி வாய்க்கும். வழக்கு சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும் உங்களின் சப்தம - விரயாதிபதியான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்கிறார். உங்களின்
பலவீனத்தை சரிசெய்வீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாமனார்- மாமியார் உதவுவர். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், பேச்சு வார்த்தையால் சுமுகமாகும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். காரியங்கள் கைகூடும். சொத்து சேரும்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குரு, தமது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் வேலை அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். புது பொறுப்புகள்- பதவிகளை ஏற்க வேண்டாம். சிலர், உங்கள் மீது வீண்பழி சுமத்தலாம்.
குரு 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத் திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்கிறார். வீண் செலவு, கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில், கடந்த கால நஷ்டங்களை சரி செய்வீர்கள். பற்று - வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். அனுபவம், பொறுப்பு மிகுந்த ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் விலகும். ரியல் எஸ்டேட், கணினி
உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், அவமானங்களும் ஏமாற்றங்களும் விலகும்.
உங்களின் உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வர். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர்
பரிசீலிக்கப்படும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு வரும்.
கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு
செல்லும் வாய்ப்பு வரும். மாணவர்கள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வார்கள். கலைத் துறையினரின் புதிய முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். அரசியல்வாதிகளுக்குப் பெரிய பொறுப்புகள் தேடி வரும்; தேர்தலில் வெற்றி கிட்டும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்வின் அதிர்ஷ்ட அத்தியாயத்தைத் துவக்கிவைப்பதாக அமையும்.
பரிகாரம்: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி
பெறுவீர்கள்.
0 comments:
Post a Comment