கனிவான பேச்சால் காரியம் சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும். மருத்துவப் பரிசோதனை அவசியம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். எவருக்காகவும் வாக்கு தவறவேண்டாம். காசோலை தருவதற்குமுன் வங்கி கையிருப்பை சரிபார்ப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில், சாதாரணப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். கர்ப்பிணிகள்
பயணங்களைத் தவிர்க்கவும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்து இடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும். உறக்கமின்மை மன அழுத்தம் தரக்கூடும். குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தம்பதிக்கு இடையே அன்பு குறையாது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மழலை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும், உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், மறைமுக எதிர்ப்பு, வீண் செலவுகள், சிறு அவமானம் வந்து செல்லும். கை- காலில் அடிபடலாம். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்க்கவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் சிறு மனசஞ்சலம், வீண்
டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும்.
29.8.13 முதல் 12.11.13 வரை, உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு தனது நட்சத்திரமான புனர் பூசத்தில் செல்வதால், மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போகவும். கடந்த காலத்தை நினைத்து
வருந்துவீர்கள்.உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப் பற்றாக்குறை வந்து செல்லும். சாட்சி- கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத தொழிலில் முதலீடு வேண்டாம். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும்.
உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போகவும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். வீண் பேச்சுகளைத்
தவிர்க்கவும். நீங்கள் பார்த்த வேலைக்கு வேறுசிலர் உரிமை கொண்டாடுவர். எனினும், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னிப்பெண்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும்.
பெற்றோரை தவறாகப் புரிந்துகொள்ளா தீர்கள். மாணவர்கள், பாட சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது நல்லது. சிலர், விடுதியில் தங்கிப் படிக்க நேரிடும். அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் சிக்கிக்கொள்வதோ, தலைமையைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினர் புதிய நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களின் உள்மனத்தில் ஒருவித குழப்பத்தைத் தந்தாலும், பணிவான போக்கால் உங்களுக்கு
வெற்றி தருவதாக அமையும்.
பரிகாரம்:
காஞ்சிபுரம்-உத்திரமேருருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில்அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். பழைய கல்விநிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நிம்மதி கிட்டும்.
0 comments:
Post a Comment