துவங்கியதை முடிக்கும் வரை துவளாதவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் தொடர்கிறார். வெளிச்சத்துக்கு வருவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். பல மாதங்களாக கிடப்பில் கிடந்த வேலைகளையும் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். அந்தஸ்து உயரும். தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதக மாக அமையும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதரர் வகையில்
உதவிகள் கிடைக்கும். ஆடை- ஆபரணம் சேரும். வழக்கில் வெற்றி உண்டு. குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.
வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரையிலும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரையிலும், உங்கள் பூர்வ புண்ணிய அஷ்டமாதிபதியான குரு தன் நட்சத்திர மான புனர்பூசத்தில் செல்வதால்,
பண வரவு உண்டு. சொத்து வாங்குவது-விற்பது லாபமாக முடியும். கர்ப்பிணிகள் படிகளில் ஏறுவது- இறங்குவதோ, கடினப் பொருட்களைத் தூக்குவதோ கூடாது.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன் தீர புது வழி கிடைக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு, புனர்பூசம் நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும் வக்ரகதியில் செல்கிறார். எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன்
வந்துசெல்லும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் போட்டியாளர்களை திகைக்கவைப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்கள் ஆவர். பெரிய
நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.
வியாபார சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அமர்வீர்கள். பங்கு தாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி
வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் வெற்றி நிச்சயம். கலைத் துறையினரே! அலட்சியப்படுத்திய நிறுவனம் உங்களை அழைத்து பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். அரசு கௌரவிக்கும். அரசியல் வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகளையும் வசதி வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவையாறு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணா மூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment