குரு பெயர்ச்சி விருச்சிகம் ராசி பலன் 2013 - 2014


தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை 8-ஆம் வீட்டில் மறைவதால், உங்கள் இலக்கை எட்டிப்பிடிக்க கடும் முயற்சி தேவை. தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்; அவ்வப்போது விவாதங்களும் எழும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. பழைய கடன் பிரச்னை மனதை வாட்டும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குரு உபய வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும். குரு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது
நடக்கும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டு பிளான் அப்ரூவலாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி, ரசனைக்கேற்ற வீடு வாங்குவீர்கள். ஆபரணங்கள் சேரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோர்வு நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும்.

குருபகவானின் சஞ்சாரம்: 
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் தோற்றப்பொலிவு, பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதி பணம் தந்திருந்த சொத்துக்கு மீதி பணமும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனோபலம்
அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

29.8.13 முதல் 26.1.14 மற்றும் 13.4.14 முதல் 12.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர் பூசத்தில் செல்கிறார். எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பி-களின் நட்பு
கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால், உங்களின் பலவீனங்களை மாற்றிக்கொள்ள முடிவு எடுப்பீர்கள். பிரிந்திருந்தவர்
ஒன்று சேருவர். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப் படுவீர்கள்.

சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரி யின் திருமணத்தை நடத்துவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.
      
வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப்
போட்டிகள் அதிகரிக்கும். எவருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களின் கெடுபிடிகள் விலகும். மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிக்கல்ஸ், துரித உணவகங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி, இனி ஆதரிப்பார். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்களுக்கு போட்டிகளில் பரிசு
கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரிப்பர். கலைத் துறையினருக்கு பெரிய
நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். அரசியல்வாதிகள், எதிர்ப்புகளைத் தாண்டி சாதிப்பர். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவு மற்றும் அலைச்சலைத் தந்தாலும், உங்களை மகிழ்ச்சிப் படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: 
கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment