பெற்ற தாய்- பிறந்த மண் மீது அதீத பற்று கொண்டவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை 6-ஆம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன எதிர்ப்புகள் வரும். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் உண்டு. சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். மருத்துவச் செலவுகளும் வந்து போகும். வழக்கை நினைத்து கவலை அடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையை அறவே அகற்றுங்கள். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். கவனம் தேவை.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், தடைகள் ஓரளவு நீங்கும். முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு- வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், கடனாகக் கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். மதிப்பு கூடும். திருமணம் கூடி வரும்.
புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சிப்பீர்கள்.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை, உங்களின் திருதியாதி பதியும்-விரயாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். பணத்தட்டுப்பாடு இருக்கும். பிள்ளை களால் அலைச்சலும், செலவுகளும் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதரர் உதவுவார்கள்.
13.11.13 முதல் 26.1.14 வரை, குரு புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
வியாபாரம் சுமார்தான். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை, விளம்பர யுக்திகளால் லாபம்
அதிகரிக்கச் செய்வீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். அரசாங்கத்தை பகைக்காதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி, பதிப்பகங்களால் லாபம் அடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என்று செல்லாமல், பேசி தீர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். எல்லா நேரமும் கறாராகப்
பேசாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
கன்னிப் பெண்களுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில்
அமர்வீர்கள். மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து போகவும். கலைத் துறையினரின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். அரசியல்வாதிகள், கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியினராலும் அலைக்கழிக்கப்படுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஏமாற்றம் மற்றும் பணப்பற்றாக் குறையை தந்தாலும், ஓரளவு முன்னேற்றத்தை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.
0 comments:
Post a Comment