வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர் நீங்கள். குரு இப்போது 4-வது வீட்டில் அமர்கிறார். முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். திருமணம், கிரகப்பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அப்ரூவல் இல்லாமல் வீடு கட்ட துவங்க வேண்டாம். வங்கி லோனும் தாமதமாகவே கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சு வலி, கை, கால் வலி வந்துபோகும். பண வரவும் உண்டு; செலவும் உண்டு. வாகன இன்சூரன்ஸ் போன்றவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
விபத்துகள் வந்துபோகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை குறித்து நல்ல பதில் வரும். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்க்கவும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன- பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு பதவியில் இருப்பவர்களின் உதவியால், தடைப்பட்ட காரியங்களை சாதிப்பீர்கள். புறநகர் பகுதியிலாவது வீடு- மனை வாங்கலாம் என முயற்சிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்தை பெறுவதில், தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் மதிப்பு- மரியாதை கூடும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில்
அவ்வப்போது சச்சரவு எழும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.
தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14
வரை, உங்களின் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்கிறார். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப் பட்ட சுபகாரியங்கள் கூடிவரும். பிள்ளைகளின் கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற கட்டட பணியை மீண்டும் துவங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூச நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ரகதியில் செல்வதால் வசதி- வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் லாபம் வரும். உத்தியோகத்தில் வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருக்கும்.
சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப்பெண்கள், தங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து
செயல்படுவது நல்லது.
மாணவர் களுக்கு கல்வியில் அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினருக்கு, பணவரவு சுமார்தான். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகள் தடைகள், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அலைக்கழிப்பை தந்தாலும் இறுதியில் மனத்தெளிவும் முன்னேற்றமும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை நாளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.
0 comments:
Post a Comment