
சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் செயல்படுபவர் நீங்கள். குருபகவான் இப்போது 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ல் நுழைவதால், சிக்கனமாக இருக்க
நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணவரவும் உண்டு. சுபச் செலவுகளும் தொடரும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் பயணிப்பதைத் தவிருங்கள். எளிய காரியங்களையும் போராடி முடிக்க வேண்டியது இருக்கும். எவரிடமும் குடும்ப அந்தரங்க விஷயங்களைச் சொல்லவேண்டாம். வங்கிக் காசோலையில்
முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தங்க ஆபரணங்களை
இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். குரு, உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால்
விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டு
லோன் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு
6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி-களின்
நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ஆம் வீட்டைப்
பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளி மாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும்.
பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் கிட்டும். மகளுக்கு நல்ல
வரன், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும்.
26.6.13 முதல் 28.8.13 வரை மற்றும் 27.1.14 முதல்
12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கட்டட
வேலையைத் துவங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். தாயாருக்கு சிறு சிறு
அறுவை சிகிச்சைகள் வந்து போகும். வாகன ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில்
புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் சஷ்டம-
பாக்கியாதிபதியான குரு, தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்
புகழ், கௌரவம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையின் உடல் நலம்
சீராகும். அவர்வழி உறவினர்களுடன் பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை தீரும். 13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர
கதியில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து
வாங்குவீர்கள். செல்வாக்கு உயரும்.
வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். தொழில்
ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். துணி, மின்னணு-
மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை
அனுசரித்து போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர் களுடன் புது
ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத் தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்
வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். இரண்டாம் கட்ட
அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விருப்பப்பட்ட இடமாற்றம்
உண்டு.
கன்னிப்பெண்களின் கனவு நனவாகும். சிலருக்கு, தடைப்பட்ட
உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலையின் நிமித்தம் பெற்றோரைப்
பிரிவீர்கள். திருமணம் தடைப்பட்டு முடியும். மாணவ-மாணவியர், திறமையை
வெளிப்படுத்தி பரிசு- பாராட்டு பெறுவர். கலைத் துறையினரே! சிறிய
வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்
பூசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய அனுபவங்களை தருவதுடன், ஓரளவு முன்னேற்றம் அளிப்பதாகவும் அமையும்.
பரிகாரம்:
திருச்சி அருகே திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீஎறும்பீஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
0 comments:
Post a Comment