தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படிதான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். 8ல் மறைந்து நிற்கும் உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 30ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
உங்களின் பாக்யாதிபதியான புதன் 25ந் தேதி முதல் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் பணப் பற்றாக்குறை தீரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த தொகை வரும். செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டு. சொத்துப் பிரச்னை, பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.
ஆனால், 21ந் தேதி முதல் செவ்வாய் 8ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், ஈகோ பிரச்னைகள் வரும். ஏழரைச் சனியும் நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகளையும், சிக்கல்களையும் தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் அலைச்சல் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லது நடக்கும். பிள்ளை களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலை கிடைக்காமல் இருந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மாணவர்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் ஏழரைச்சனி நடைபெறுவதால் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் உங்களின் கடின உழைப்பால் மூத்த அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையைத் தவிர்க்கப் பாருங்கள். முற்பகுதியில் செலவுகள், அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 18, 19, 25, 26, 27, 28, 30 ஜூன் 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 7, 8 மற்றும் 9ந் தேதி காலை 10 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டையில் அருளும் குருபகவானை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment