விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் வலுவாக காணப்படுவதால் தைரியம் கூடும். சவாலான
காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி இடத்தை விற்று புதுவீடு, மனை வாங்குவீர்கள். உங்கள் ராசிக்குச் சாதகமான வீடுகளில் சுக்கிரனும், புதனும் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளை பாக்யம் கிட்டும்.
குடும்பத்தினரோடு நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஏழரைச்சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். 27ந் தேதி வரை குருபகவான் 7ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கையும், கௌரவத்தையும் தரும். 28ந் தேதி முதல் குருபகவான் 8ல் மறைவதால் செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கேது வலுவாக இருப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
மாணவர்களே! உங்களின் அறிவுத்திறன் கூடும். சமயோசித புத்தியால் முன்னேறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள், சிக்கல்கள் நீங்கும்.
நல்ல வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களுடன் போராட வேண்டியது வரும். ஏற்றுமதி, இறக்குமதி, ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு தரப்படும். தள்ளிப்போன இடமாற்றம் கிடைக்கும். சூழ்ச்சிகளை வென்று முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை இருக்கும். மரப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19,20, 21, 22, 27, 28, 29, 30, 31 ஜூன் 1, 5, 6, 7, 8, 14
சந்திராஷ்டம தினங்கள்:
மே 15ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் ஜூன் 9ந் தேதி காலை 10 மணி முதல் 10, 11 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
பழநி முருகனின் ராஜ அலங்காரத்தை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment