வைகாசி மாத ராசி பலன்கள் - தனுசு


இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்த நீங்கள், தனக்குக் கீழே இருப்பவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்களின் ராசிநாதன் குருபகவான் 6ம் வீட்டில் அமர்ந்து
உங்களை அலைக்கழித்தார். கடன் பிரச்னையை ஏற்படுத்தினார். மே 28ந் தேதி முதல் ராசிக்கு 7ம் வீட்டில் வந்தமர்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் அமைப்பு உண்டாகும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 29ந் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் நிற்பதால் கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவி வழியிலும் செலவு, அலைச்சல் இருக்கும். மனைவிக்கு முதுகு வலி, கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் ஆரோக்யம் கூடும்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சூரியன் 6ம் வீட்டில் தொடர்வதால் அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கும் உங்களுக்குமிடையே  குழப்பத்தை ஏற்படுத்தி வந்தவர்களின் சூழ்ச்சிகளைத் தாண்டி நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். மாணவர்களே! படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். ஆசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும்.  
   
வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். அதிக முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் இதுவரை சந்தித்த அவமானங்கள், திடீர் இடமாற்றங்கள், வேலைச்சுமைகள் இவையெல்லாம் 28ந் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை, இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! நீர் வரத்து அதிகரிக்கும். மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். தடைகளைத் தாண்டி ஒருபடி முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 20, 21, 22, 23, 24, 30, 31, ஜூன் 1, 2, 7, 8, 9, 10, 11, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 15ந் தேதி மதியம் 2 மணி முதல் 16, 17 மற்றும் ஜூன் 12, 13, 14ந் தேதி காலை 8 மணி வரை எதிலும் ஒருவித படபடப்பும், வீண் அலைச்சலும் வந்துபோகும்.

பரிகாரம்:

திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment