பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களான நீங்கள், 29ந் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். 30ந் தேதி
முதல் சுக்கிரனும், 25ந் தேதி முதல் புதனும் 6ம் வீட்டில் மறைவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். சூரியன் 5ம் வீட்டிலேயே இந்த மாதம் முழுக்க தொடர்வதால் அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்து நீங்கும்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 6ல் சென்று மறைவதால் சிறு சிறு அவமானங்கள், வீண் பழிகள் வந்துநீங்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களின் நட்பை தவிர்த்துவிடுவது நல்லது. செவ்வாய் 20ந் தேதி வரை ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று தொடர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால், வக்ரமாகி ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யோசிக்காமல் திடீரென்று முடிவெடுத்து விட்டோமோ என்றெல்லாம் அவ்வப்போது குழம்புவீர்கள்.
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். தலைமையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்களே! தொடக்கத்திலேயே கல்விப் பிரிவை தெளிவாக தேர்ந்தெடுங்கள். இப்போது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு, அந்த கோர்ஸ் பிடிக்கவில்லையென்று மற்றொரு பிரிவில் சேர வேண்டாம். வியாபாரத்தில் மாதத்தின் முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஆனால் பிற்பகுதியில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.
உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருக்குமென்றாலும் மதிப்பும் மரியாதையும் குறையாது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
கலைத்துறையினரே! மாதத்தின் முற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பிற்பகுதியில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். குறுகியகாலப் பயிர்களை தவிர்க்கப் பாருங்கள். ராஜதந்திரத்தால் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 23, 24, 25, 26, 27 ஜூன் 3, 4, 5, 6, 8, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 18, 19, 20ந் தேதி காலை 8.30 மணி வரை மற்றும் ஜூன் 14ந் தேதி காலை 8 மணி முதல் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
பரிகாரம்:
வேலூருக்கு அருகேயுள்ள பள்ளூர் வராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு பானகம் கொடுங்கள்.
0 comments:
Post a Comment