வைகாசி மாத ராசி பலன்கள் - கும்பம்


தும்பைப்பூபோல இளகிய மனசுள்ள நீங்கள், மற்றவர்களின் துன்பத்தை பொறுக்க மாட்டீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி
முதல் 5ம் வீட்டில் அமர்வதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். தாழ்வுமனப்பான்மை, முன்கோபம், எதிலும் ஆர்வமில்லாமல் இருந்த நிலையெல்லாம் மாறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எப்போதும் சண்டை, சச்சரவு என்று மோதிக் கொண்டிருந்த, அவ்வப்போது பிரிந்து பிரிந்து, பிறகு சேர்ந்து கொண்டிருந்த கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மகனுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். சூரியன் 4ல் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் உடன்பிறந்தவர்கள் பொருளுதவி செய்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்களின் ராசிநாதன் ராகுவுடன் நிற்பதால் கொஞ்சம் அலர்ஜி, இன்ஃபெக்ஷன் வந்துபோகும்.

அரசியல்வாதிகளே! இதுவரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கு இப்போது பலன் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி உண்டு. மாணவர்களே! படிப்பின் மீது இருந்த வெறுப்பு நீங்கும். தொடக்கத்திலிருந்தே ஆர்வமாக படிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வெற்றிகள் குவியும். வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள். சிலருக்கு சொந்த இடத்திற்கே கடையை மாற்றும் யோகம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள்.

பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்யோகத்தில் இருந்து வந்த நிலையற்ற தன்மை மாறும். ஜூவல்லர்ஸ், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களால் லாபம் பெருகும். உத்யோகம் நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற பயம் இருந்ததே, அந்த பயம் நீங்கும். இனி நிரந்தரமாக்கப்படுவீர்கள். சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை நீங்கி மகசூல் பெருகும். வெற்றியும், மகிழ்ச்சியும் தொடங்கும் மாதமிது.                

ராசியான தேதிகள்:

மே 16, 17, 18, 19, 25, 26, 27, 28, 30 ஜூன் 3, 4, 5, 6, 8, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 20ந் தேதி காலை 8.30 மணி முதல் 21 மற்றும் 22ந் தேதி மதியம் 2 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:

செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள திருமலை வையாவூர் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment