சுதந்திர மனப்பான்மையும், சுய ஒழுக்கமும் உடைய நீங்கள், எப்பொழுதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால்
அடுத்தடுத்து வரும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய சமயோசித புத்தியால் அவற்றையெல்லாம் சரி செய்வீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து புதிய முயற்சிகளில் தடைகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 4ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன தடைகள் நீங்கும்.
ஆனால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சூரியன் 3ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம்.
பணம் மற்றும் நகை விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். பயணங்களின்போது கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியை உபயோகிக்காதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியில் செல்வாக்கு உயரும். உண்ணாவிரதப் போராட்டம், ஊர்வலங்களை நடத்தி புகழடைவீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். மாணவர்களே! படிப்பில் மந்தத்தன்மை நீங்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள். சக ஊழியர்களும் உங்களின் புதிய முயற்சியை பாராட்டுவார்கள். சம்பளம் கூடும். சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சமயோசித புத்தியாலும், தைரியமான முடிவுகளாலும் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 18, 19, 20, 21, 27, 28, 29, 30, 31 ஜூன் 5, 8, 11, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 22ந் தேதி மதியம் 2 மணி முதல் 23 மற்றும் 24ந் தேதி மாலை 5.30 மணி வரை உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்:
சென்னை - பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோயிலிலுள்ள அங்காரகனை தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment