கல் நெஞ்சக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைக்கும் நீங்கள், எங்கு தட்டினால் எங்கு விழும் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள். 20ந் தேதி வரை ராசிக்கு 8ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சின்னச் சின்ன விபத்துகள், ஏமாற்றங்கள் வரக்கூடும். 21ந் தேதி முதல் செவ்வாய் 9ல் நுழைவதால் மனப் போராட்டங்கள் ஓயும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும்.
தந்தையாருடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். தந்தைவழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். உங்களின் ராசிநாதன் புதன் 25ந் தேதி முதல் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். குருபகவான் 27ந் தேதி வரை 9ம் வீட்டில் தொடர்வதால் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். ஏழரைச்சனி நடைபெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். கை வலி, கழுத்து வலி மற்றும் மூட்டு வலி வந்துபோகும்.
சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்கத்தால் ஓரளவு ஆதரவு உண்டு. ஆனால், தந்தைக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமைக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம். கன்னிப் பெண்ளே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யப் பாருங்கள்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். 28ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளால் தொந்தரவுகள் இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படப் பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! அரிசி, எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 19, 23, 25, 26, 28, 31 ஜூன் 1, 2, 3, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 4ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்:
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment