வைகாசி மாத ராசி பலன்கள் - சிம்மம்


போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள்
உடைபடும். இழுபறியாக இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். உடன் பிறந்தவர்கள் தேடி வருவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். புது வீட்டிற்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி நல்ல விதத்தில் முடியும். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்து உங்களை பலவிதத்திலும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 11ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் பணவரவு உண்டு.

எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான சூரியன் 10ம் வீட்டில் கேந்திர பலம்பெற்று நுழைந்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் கூடி வரும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். திருமணம் கூடி வரும். எதிர்ப்புகள் விலகும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சனியும், ராகுவும் 3ல் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கூடி வரும். புது முதலீடுகள் லாபம் தரும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள்.

சந்தையில் மதிக்கப்படுவீர்கள். கண்ணாடி, சிமென்ட், பூ வகைகளால் லாபமடைவீர்கள். 28ந் தேதி முதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டு. வேலைச்சுமை குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கும். விவசாயிகளே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புது நிலம் கிரயம் செய்வீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், யோகங்களும் தொடங்கும் மாதமிது.          

ராசியான தேதிகள்:

மே 15, 20, 21, 22, 23, 24, 29, 30 ஜூன் 1, 7, 8, 9, 11.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 2, 3 மற்றும் 4ந் தேதி மதியம் 1.30 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு குடையும், காலணியும் வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment