வைகாசி மாத ராசி பலன்கள் - மேஷம்


பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கோபப்படுத்தி,
டென்ஷனாக்கிய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி 2ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். உஷ்ணத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவுகள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். 

உங்களின் தனாதிபதியான சுக்கிரன் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 21ந் தேதி முதல் செவ்வாயும், சூரியனும் ஒன்று சேர்வதால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். 28ந் தேதி முதல் கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும், செல்வாக்கையும் தந்த குருபகவான் 3ம் வீட்டில் சென்று மறைவதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். 

ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும். வேலைச்சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். சிலரை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். கண்டகச்சனி நடைபெறுவதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். உரிமையுடன் மனைவி ஏதேனும் பேசினால் அதற்காக கோபப்படாதீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும். 

கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேரும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, மருந்து, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். கரும்பு, சவுக்கு லாபம் தரும். கனவுகள் நனவாகும் மாதமிது. 

ராசியான தேதிகள்: 

மே 15, 20, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 8, 9, 10, 11, 14.

சந்திராஷ்டம தினங்கள்: 

மே 24ந் தேதி மாலை 5.30 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி இரவு 8 மணி வரை எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

பரிகாரம்: 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment