மறப்போம், மன்னிப்போம் எனும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ஆம் வீட்டில் அமர்வதால் வசதி
வாய்ப்புகளையும், வாழ்க்கை தரத்தையும் ஒரு படி உயர்த்துவார். சந்தோஷம் பெருகும். குடும்பத்தில் வசந்தம் வீசும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள்
கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை முடிவுக்கு வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும்.
சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு 5-ஆம் பார்வையால் உங்களின் 9-ஆம்
வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். அவர் வழி
உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள்.
11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதர-சகோதரிகள் ஆதரவாக இருப்பர்.
வழக்கு சாதகமாகும். நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-ஜீவனாதிபதியுமான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். இடம் வாங்க
முயற்சிப்பீர்கள். வேலை அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும்
உதவ வேண்டாம். 26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்காலம் குறித்த
பயம், வந்துசெல்லும். வீட்டில் கூடுதல் அறை, தளம் கட்டும் முயற்சிகள்
பலிதமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் தன- லாபாதிபதியான
குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், புதிய முயற்சிகள்
வெற்றியடையும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். சுப
நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பொறுப்புகள் தேடி வரும். மகளுக்கு
வேலை கிடைக்கும்; திருமணமும் கூடி வரும்.
குரு 13.11.13 முதல் 26.1.14 வரை, புனர்பூசத்திலும்
27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ரகதியில் செல்கிறார். இந்த
காலகட்டத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். எனினும் வளர்ச்சி தடைப்படாது.
உங்களைப் பற்றி விமர்சனங்கள் வரக்கூடும். காசோலை, முக்கிய கோப்புகளைக்
கையாளும்போது அலட்சியம் வேண்டாம். அரசு விஷயங்களிலும் கவனம் தேவை.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேங்கிய சரக்கு களை
தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடுகள் செய்து
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள்.
கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு.
பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பர். உத்தியோகத்தில், உங்களை
அலைக்கழித்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சில புதுமைகளைச்
செய்து எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.
புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கில் வெற்றி உண்டு. கன்னிப்
பெண்களின் கனவு நனவாகும். அடி வயிற்றில் இருந்த வலி, தூக்கமின்மை
விலகும்.கல்யாணம் கூடி வரும். மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில்
மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி
கிட்டும்.
கலைத் துறையினரே! வெகுநாட்களாக எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிலும் வெற்றி பெறுவர்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி செல்வம், செல்வாக்கு, திடீர் யோகங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும்,
குரு பகவானையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மனவளம்
குன்றியவர்க்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
0 comments:
Post a Comment