வெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு
காண்பீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். புறநகரில் மனை வாங்குவீர்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய
நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம்
வரும். மூத்த சகோதரர்களால் உதவிகள் கிட்டும். உங்கள் ராசிக்கு 3-ஆம்
வீட்டை குரு பார்ப்பதால், மதிப்பு உயரும். கோயில் கும்பாபிஷேகத்தை
முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் -
விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால்
திடீர் யோகம் உண்டாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கடன் பிரச்னை
தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள். சகோதரர்கள் உங்கள்
உதவியை நாடுவர்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ்,
கௌரவம் கூடும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி, அரசால்
அனுகூலம் உண்டு. வெளி நாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.
மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் ராசிநாதனும் -
சுகாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்,
வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு
வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். தாயாரின் முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புது வேலை
கிடைக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும்
27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால்,
நினைத்தது நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீகச்
சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர், வசதியுள்ள
வீட்டுக்கு மாறுவார்கள்.
வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய
வாய்ப்புகளும் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவர். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள்
நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தகச் சங்கத்தில் பதவி கிடைக்கும்.
புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும்.
பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மாறுபட்ட
அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற
அங்கீகாரம் கிட்டும். நீண்டநாளாகக் கேட்டுக்கொண்டிருந்த இடமாற்றம் கேட்ட
இடத்துக்கே கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி
வரும்.
கன்னிப்பெண்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெறுவார்கள். இசை, இலக்கியம், ஓவிய போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைத்
துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் பெறுவர். அவர்களின் படைப்புத்
திறன் வளரும். அரசியல்வாதிகளுக்கு, தலைமை ரகசிய பொறுப்பு ஒன்றை
ஒப்படைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை விஸ்வரூபம்
எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் வல்லமையையும் தருவதாக
அமையும்.
பரிகாரம்:
திருநாங்கூர்-அண்ணன்கோவிலில் அருளும் ஸ்ரீகண்ணன் நாராயண பெருமாளையும்
தாயாரையும் ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை கர்ப்பிணிகளின்
பிரசவ செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். வளம் பெருகும்.
0 comments:
Post a Comment