நீங்கள் உங்கள் திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த மாதம் பிறப்பதால் உங்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பல
மாதங்களாக பாதியிலேயே நின்ற வேலைகள் முடிவடையும். காது வலி, கழுத்து வலி, முதுகு வலி என்று முனகிக் கொண்டிருந்த நீங்கள் ஆரோக்யமடைவீர்கள். 30ந் தேதி முதல் சுக்கிரன் 2ல் அமர்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
உங்களை தவறாகப் புரிந்து கொண்டு பேசாமலிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
21ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ற இடமும் அமையும். மனைவிக்கு அலைச்சல், வேலைச்சுமை, முன்கோபம் நீங்கும். கடந்த ஓராண்டு காலமாக ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக இருந்து உங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் ராசியை விட்டு விலகி தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி கிட்டும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியினராலும் அமுக்கப்பட்டிருந்த நீங்கள் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பெருமையாக பேசப்படுவீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களே! நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த மாதத்தின் பிற்பகுதியில் முக்கியத்துவம் கிடைக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள பாக்கியும் கைக்கு வரும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! பாராட்டுகள் உண்டு. விவசாயிகளே! பூச்சித் தொல்லை, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த தகராறுகள் நீங்கும். முற்பகுதியில் அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 22, 23, 25, 29, 30, 31 ஜூன் 1, 2, 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 26ந் தேதி இரவு 8 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்:
கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலிலுள்ள வீணையை ஏந்திய அனுமனை தரிசித்து வாருங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment