சித்திரை மாத ராசி பலன்கள் - கடகம்


அதிகமாக கனவு காணும் நீங்கள், அதை நனவாக்குவதற்காக கடுமையாக உழைப்பீர்கள்.  கடந்த ஒரு மாதகாலமாக 9ம் வீட்டில் அமர்ந்து தந் தையாருக்கு ஆரோக்கிய குறைவையும் தந்தையாருடன் மனத்தாங்கலையும்
சேமிப்புகளையும் கரைத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் வந் தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சவாலான காரியங்களை கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். 

மன  இறுக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். அரசாங்க விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்துப் பேச வேண்டுமென்று  நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலை கிடைக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். தந்தைவழிச்  சொத்து வந்து சேரும். 

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் பழைய காலி மனையை விற்று, புதுவீடு வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். குழந்தை பாக்யம்  கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.  சனியும் ராகுவும் 4ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். 

கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். 

மாணவர்களே! உங்களுடைய நீண்டநாள் ஆசை நிறைவேறும். குரு லாப வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒ த்துழைப்பு அதிகரிக்கும். 

கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கமிஷன்  வகைகளால் லாபமடைவீர்கள். செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளுடன் இருந்து வந்த  மோதல் போக்கு நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்து கொள்வார்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலர் பணியாற்றும்  நிறுவனத்தை புதியவர்கள் வாங்க வாய்ப்பு இருக்கிறது. புதிய உரிமையாளர்கள் மூலமாக உங்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். 

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். 

விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரங்களை மீட்க உதவிகள்  கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது. 

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 14, 15, 21, 22, 23, 24, 25, 30, மே 1, 2, 8, 9, 12.

சந்திராஷ்டம தினங்கள்: 

மே 3ந் தேதி மாலை 5 மணி முதல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.

பரிகாரம்: 

காரைக்காலுக்கு அருகேயுள்ள கந்தன்குடி முருகனை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment