நகைச்சுவை உணர்வு அதிகமுடைய நீங்கள், பழைய நூல்களை விரும்பிப் படிப்பீர்கள். அறிஞர்களின் வார்த்தைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளிலும்
நட்சத்திரங்களிலும் சென்று கொண்டிருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு விற்பது, வாங்குவது சாதகமாக முடிவடையும்.
உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். கேது லாப வீட்டில் தொடர்வதால் வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வழக்கில் இருந்த தேக்கநிலை மாறும்.
அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.
கன்னிப்பெண்களே! எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும்.
மாணவர்களே! நீச்சல் கற்றுக் கொள்வீர்கள். இசை, ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறுவீர்கள்.
உங்களின் லாபாதிபதியான செவ்வாய் லாப வீட்டிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்கு தாரர்களை சேர்ப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய லைசன்ஸ் வந்து சேரும். புரோக்கரேஜ், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு.
கலைத்துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். கலைத்திறன் வளரும்.
விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 19, 20, 21, 22, 28, 29, 30, மே 6, 7, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 1ந் தேதி மதியம் 2 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி மாலை 5 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள வந்தவாசியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள சோகத்தூர் யோக நரசிம்மரை தரிசித்து வாருங்கள். அன் னதானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment