சித்திரை மாத ராசி பலன்கள் - ரிஷபம்


அருவிபோல் ஓடிக் கொண்டிருப்பதை விரும்பும் நீங்கள், பயன்படுத்தாததால் துரு பிடிப்பதை விட உழைத்து தேய்வதையே உயர்வாக  நினைப்பீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே குருபகவான் தொடர்வதால் வேலைச்சுமை
அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எந்த ஒரு வேலையாக இருந் தாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும்.  யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். லேசாக  தலைச்சுற்றல், முதுகு வலி, மூட்டு வலி வரக்கூடும். கொஞ்சம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 4ந் தேதிவரை 12ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் தொண்டைப்புகைச்சல், தூக்கமின்மை, முன்கோபம் வந்து நீங்கும். செலவுகளும் கட்டுக்கடங்காமல்  போகும். 5ந் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால் நிம்மதி கிட்டும். சரும நோய், அலர்ஜியிலிருந்து விடுபடுவீர்கள். செவ்வாய் 12ம் வீட்டிலேயே தொடர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.  செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். 

நீண்டகால பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். உங்களின் சுகாதிபதியான சூரியன் உச்சம் பெற்று காணப்படுவதால் அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆனால்  சூரியன் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கமில்லாமல் போகும். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். சனியும் ராகுவும் 6ம் வீட்டில் வலுவாக  அமர்ந்திருப்பதால் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும். வேற்றுமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

அரசியல்வாதிகளே! பதவிகள் தேடிவரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 

கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம்  வரும். 

மாணவர்களே! பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். 

வியாபாரிகளே! வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏமாற்றிக்கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கிவிட்டு அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர் த்துவீர்கள். 

கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

விவசாயிகளே! வயலில் எலித்தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். முற்பகுதியில் ஏமாற்றங்கள், ஆரோக்கியக் குறைவு, செலவினங்களை தந்தாலும் பிற்பகுதி எதிர்பாராத திடீர் திரு ப்பங்களையும் நன்மைகளையும் தரும் மாதமிது. 

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 16, 17, 18, 19, 20, 22, 24, 25, 26, 28, மே 2, 4, 6, 7, 9, 13, 14 

சந்திராஷ்டம தினங்கள்: 

ஏப்ரல் 29ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 30 மற்றும் மே 1ந் தேதி மதியம் 2 மணி வரை வீண் கவலைகள் வந்து செல்லும். 
  
பரிகாரம்: 

விருத்தாசலம் குமாரதேவர் மடத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசித்துவிட்டு வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment