சித்திரை மாத ராசி பலன்கள் - சிம்மம்


உணர்வுப்பூர்வமாக யோசித்து அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்களே! நினைத்ததை முடிக்கும் வரை பிடிவாதமாக இருப்பவர்களே! கடந்த ஒன்றரை  மாத காலமாக 8ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்படுத்திய செவ்வாய்,
9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார். பணத்தட்டுப்பாட்டால் நீங்கள்  பதைபதைத்தீர்கள். எங்கு சென்றாலும் தோல்விதான் மிஞ்சியது. உதவி செய்கிறேன் என்று சொன்னவர்கள் கூட கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்கள். செய்வதறியாமல் நீங்கள் திணறித் தவித்தீர்கள். இந்த மாதத்தில் அந்த நிலையெல்லாம் மாறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.  உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவு வார்கள். சகோதரருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.  சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் விலை உயர்ந்த வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் ராசிநாதனான சூரியன் உச்சமாகி இருப்பது மனதில் தைரியம் பிறக்கும். 

ஆனால், சூரியனை சனி பார்ப்பதாலும் சூரியனுடன் கேது நிற்பதாலும் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன், கண் மற்றும் பல்வலி வந்து நீங்கும். குரு 10ல் தொடர்வதால் உங்களைப் பற்றிய அவதூறுகளை  சிலர் பரப்பி விடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும் பார்க்காதபோது தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். 

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து  வந்த மன இறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். 

மாணவர்களே! பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக ஏற்பட்ட இழப்புகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள் இவற்றையெல்லாம் இந்த மாதத்தில் சரி செய்வீர்கள். 

உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் சிறு சிறு மோதல்கள் இருக்கத்தான் செய்யும். 10ம் வீட்டிலேயே குரு  தொடர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.  

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 

விவசாயிகளே! நெல், காய்கறி, பழ வகைகளால் லாபம் பெருகும். சனியும் ராகுவும் 3ம் வீட்டிலேயே தொடர்ந்து கொண்டிருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 14, 15, 16, 17, 24, 25, 26, 27, மே 1, 2, 3, 4, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: 

மே 6, 7 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: 

தஞ்சை பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனை தரிசித்து வணங்குங்கள். ஆதரவாற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment