சித்திரை மாத ராசி பலன்கள் - கும்பம்


யதார்த்தமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை வியக்க வைக்கும் நீங்கள், கேள்வி ஞானம் அதிகமுள்ளவர்கள். உங்களின் பூர்வ புண் யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதுவரை
தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்றவர்கள் வி ரும்பி வந்து பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். விஐபிகளும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள். 

குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாவும்  சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல்போக்கு நீங்கும். நண்பர்கள் வலிய வந்து உதவுவார்கள். பழைய பிரச்னைக்கு  தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலம்,  வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். 

கடந்த ஒருமாத காலமாக 2ம் வீட்டில் அமர்ந்து கோபமாகவும் ஏடாகூடமாகவும் பேச வைத்து, உணர்ச்சிவசப்பட வைத்த சூரியன் இப்போது 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் படபடப்பு குறையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 3ம்  வீட்டில் செவ்வாயும் கேதுவும் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. தடுமாற்றம், குழப்பம் நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வேலை கிடைக்கும். 

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் வரும். 

கன்னிப்பெண்களே! தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உங்களின் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். 

மாணவர்களே! மனதில் ஒரு தெளிவு பிறக்கும். 

உங்கள் ராசிநாதன் சனி வலுவடைந்திருப்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். இடைத் தரகர்களை நம்பி இனியும் ஏமாற  வேண்டாம். 

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும்  மனப்பக்குவம் உண்டாகும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு  ஆதரவாக இருப்பார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்விற்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.  

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். 

விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மாற்றுப்பயிரால் லாபமடைவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கி வெற்றி பெறும் மாதமிது.   

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 14, 18, 19, 20, 21, 22, 28, 29, 30, மே 6, 7, 8, 9, 12.

சந்திராஷ்டம தினங்கள்: 

ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.  

பரிகாரம்: 

வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் அருளும் விநாயகரை வணங்குங்கள். கோயிலுக்கு விளக்குப் போட எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment