சித்திரை மாத ராசி பலன்கள் - மகரம்


தன் உரிமையை விட்டுக் கொடுக்காத நீங்கள், பிறர் உரிமைக்காகவும் குரல் கொடுப்பவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன்  சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கணவன்-
மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி இ ருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி  புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். 

உடன்பிறந்தவர்கள் உங்கள் வள ர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.  எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில்  ஆதரவு பெருகும். சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் வீட்டை இடித்துக் கட்டுவது, மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட் டுக்காரருடன் பகைக்க வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். 

கன்னிப்பெண்களே! உங்கள்  ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணையாக அமைவார்கள். பெற்றோரின் நீண்டநாள் கனவுகளை நனவாக்குவீர்கள். 

மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீர்கள். 

வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். வருமானம் உயரும். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்து வீர்கள். ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதை சரி செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். 

சனியும் ராகுவும் 10ம் வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் வியக்கும்படி சில முக்கிய காரியங்களையெல்லாம் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள்  மதிப்பார்கள். சங்கத்தில் புதுப் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி இடமாற்றம் அமையும். சம்பளம் உயரும். சிலருக்கு அயல்நாட்டிலும்  வேலை அமையும்.  

கலைத்துறையினரே! உங்கள் வருமானம் உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். பதக்கம், பரிசு பெறுவீர்கள். 

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கு எல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். வசதி, வாய்ப்புகள்  அதிகரிக்கும் மாதமிது.     

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 28, 29, மே 6, 7, 8, 9, 12, 14.

சந்திராஷ்டம தினங்கள்: 

ஏப்ரல் 20ந் தேதி மாலை 5 மணி முதல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 

பரிகாரம்: 

திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை ஒருமுறை தரிசித்து விட்டு வாருங்கள். சாலையோரம் வாழும் சிறுவர்களுக்கு காலணி வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment