சித்திரை மாத ராசி பலன்கள் - தனுசு


அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் வளைந்து கொடுக்காத நீங்கள், நீதிக்காகவும் நேர்மைக்காகவும் எப்போதும் போராடுவீர்கள். புதன் சாதகமான  நட்சத்திரங்களில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு
வட்டம் விரியும். புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். திடீர்  பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சூரியனும் கேதுவும் 5ம் வீட்டில்  நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும்.

அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்து போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகளுக்கும் பிடிவாத குணம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில்  தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதாலும் 5ம் வீட்டிலேயே சுக்கிரனும் நிற்பதாலும் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள்.  5ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் வாகனத்தை சீராக இயக்கப் பாருங்கள். வீட்டி லும் குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் இருக்கும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கன்னிப் பெண்களே! வேலை கிடைக்கும். காதலும் கல்வியும் இனிக்கும்.

மாணவர்களே! நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பழைய நண்பர்களுடன் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உயர்கல்வியை தொடர்வதற்கு முன்பே சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள்.

சனியும் ராகுவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். லாபம் கூடும். உணவு, ரியல் எஸ்டேட், கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்க் கடைக்காரருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

உத்தியோகத்தில் அலுவலக  ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த சலுகைகள்  கிடைக்கும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

விவசாயிகளே! உங்களின் கடுமையான  உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஏப்ரல் 14, 15, 16, 17, 23, 24, 25, 26, மே 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஏப்ரல் 18, 19 மற்றும் 20ந் தேதி மாலை 5 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

திருவள்ளூர், அரக்கோணத்திற்கு அருகேயுள்ள சோளிங்கரில் அருளும் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு  உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment