எதிர்பார்ப்பும், தன்னலமும் இல்லாமல் எதையும் செய்பவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தூக்கமின்மையையும் பிள்ளைகளால் பிரச்னைகளையும் அவர்களின்
உயர்கல்வி, ஆரோக்கியம், திருமணம் இவற்றையெல்லாம் நினைத்து பயத் தையும் தந்து கொண்டிருந்த சூரியன் இந்தமாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்வதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். இழுபறியாக இருந்த வேலைகளும் முடிவடையும். பிள்ளைகளின் கோப தாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களின் ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆனால், செவ்வாய் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
4ந் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 5ந் தேதி முதல் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடுகட்ட வங்கிக் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும்.
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப்பெண்களே! காதல் கசக்கும். 5ந் தேதிக்குப் பிறகு தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் மனம் புண்படும்படி பேச வேண்டாம்.
மாணவர்களே! ஏழரைச்சனி நடைபெறுவதால் நுழைவுத் தேர்விற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள். மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். பற்று வரவு உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வேலைவாய்ப்பு கூடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும்.
கலைத்துறையினரே! இந்த மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு அலைச்சல், செலவுகளை தரும். பிற்பகு தியில் நல்ல வாய்ப்புகள் வரும்.
விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 21, 22, 23, 24, 25, மே 1, 2, 3, 5, 8, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 15ந் தேதி மாலை 7:15 மணி முதல் 16, 17 மற்றும் மே 13, 14 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள பைரவரை தரிசித்து வாருங்கள். பறவைகள் குடிக்க வீட்டு மாடியில் தண்ணீர் வையுங்கள்.
0 comments:
Post a Comment