சித்திரை மாத ராசி பலன்கள் - துலாம்


மனசாட்சியை மறக்காத நீங்கள், மனித நேயம் அதிகமுள்ளவர்கள். இயற்கையை ரசிப்பதோடு நில்லாமல் உருவாக்குவதிலும் வல்லவர்கள். 6ம் 
வீ ட்டில் மறைந்து கொண்டு நண்பர்கள், உறவினர்களுடன் பிரச்னைகளை
ஏற்படுத்திக் கொண்டிருக்கும் புதன் 21ந் தேதி முதல் 7ல் அமர்வதால் கோபம்  குறையும். உங்களின் அணுகுமுறையை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.  

தந்தையாருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உங்களின் பாதகாதிபதியான சூரியன் உச்சம் பெற்று வலுவாக இருப்பதால் செலவுகள் கூடிக்  கொண்டே போகும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது  நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். 

ஜென்மச் சனி தொடர்வதால் பெரிய நோய் இருப்பதைப்போல தோன்றும். உங்கள் ராசியை நெ ருப்பு கிரகங்களான சூரியனும் செவ்வாயும் பார்த்துக் கொண்டிருப்பதால் முதுகு வலி வரக்கூடும். மூட்டு, முதுகுத் தண்டில் அடிபடவும் வாய்ப்பி ருக்கிறது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் எல்லா பிரச்னைகளில் இருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். குடும்பத் துடன் வெளியூர் சென்று வருவீர்கள். குரு 8ல் மறைந்திருப்பதால் பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். 

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையால் அலைகழிக்கப்படுவீர்கள். 

கன்னிப்பெண்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர கடுமையாகப் போராடுவீர்கள். 

மாணவர்களே! விளையாடும்போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிகட்டில் நின்று பயணிக்க வேண்டாம். பொது அறிவுத்திறன் வளரும்.
வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் மாறுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. 

ஏழரைச் சனி நடைபெறுவதால் உத்தியோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். உங்களைவிட வயதில் குறைவானவர்களிடம் வளைந்து கொடுத்துப்  போக வேண்டியது வரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். அதை ஏற்றுக் கொள்ளலாம்.  

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். 

விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி  விளைச்சலை அதிகப்படுத்தப்பாருங்கள். யதார்த்தமான முடிவுகளும் சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது. 

ராசியான தேதிகள்: 

ஏப்ரல் 19, 20, 21, 22, 28, 29, 30, மே 1, 2, 6, 7, 8, 9, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: 

ஏப்ரல் 14, 15ந் தேதி மாலை 7:15 மணி வரை மற்றும் மே 10ந் தேதி மதியம் 3:15 மணி முதல் 11, 12 ஆகிய தேதிகளில்  அநாவசியமான பேச்சைத் தவிர்ப்பது நல்லது. 

பரிகாரம்: 

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்திற்கு சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment