காலத்திற் கேற்ப கோலத்தை மாற்றிக் கொண்டா லும் கொள்கை கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! கடந்த ஒருமாத காலமாக 2ம்
வீட் டில் அமர்ந்துகொண்டு சேமிப்புகளை கரைத்து, வேகமாகவும் கோபமாகவும் பேச வைத்து, குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்திய சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.
வீடு, மனை போன் றவை உங்களின் ரசனைக்கேற்ப அமையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். அரசியலில் செல்வாக்கு உயரும். குரு 5ல் நீடிப்பதால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகள £ல் அந்தஸ்து உயரும்.
மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்களின் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று காணப்படுவதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், சனியோடு ராகுவும் சேர்ந்திருப்பதால் சோர்வு, களைப்பு, தோலில் அலர்ஜி வந்து செல்லும். கேது 4ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் தனித் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள்.
வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், பெட்ரோல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகும்.
உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள்.
விவசாயிகளே! கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து புது நிலத்தை கிரயம் செய்வீர்கள். புது பம்பு செட் வாங்குவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 14, 15, 16, 20, 21, 22, 29, 30, 31, ஏப்ரல் 1, 3, 7, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 24ந் தேதி காலை 9 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி மாலை 4:30 மணி வரை பழைய சிக்கல்கள் தலைதூக்கும்.
பரிகாரம்:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள பழைய சீவரம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment