பங்குனி மாத ராசி பலன்கள் - தனுசு


அதர்மத்திற்கு வளைந்து கொடுக்காத நீங்கள், எதிலும் நியாயத்தின் பக்கம் நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனியும் ராகுவும் நிற்பதால்
 உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வேற்று மொழிக்காரர்கள்,வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நாடாளுபவர்களின் நட்பு  கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

கௌரவப் பதவிகள் வரும். வழக்குகள் சாதகமாகும். வங்கிக் கடனின் உதவி கிடைக்கும். செவ்வாயும் 4ம் வீட்டில் நிற்பதால் பூர்வீகச் சொத் தில் ஒருபகுதியை விற்று பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் சின்னச் சின்ன அலைச்சல், செலவினங்கள் இருக் கும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள் புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு  உண்டு. ஷேர் மூலமாகவும் கணிசமான பணம் வரும். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். புது வேலை அமையும்.

கேது 5ம் வீட்டிலேயே  நீடிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் ந ட்பை இழக்க நேரிடும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிநாதனான குரு 6ம் வீட்டிலேயே வலுவி ழந்து காணப்படுவதால் சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்கள், குடும்ப அந்தரங்கங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

மாணவர்களே! உங்களுடைய பொது அறிவுத்திறன் வளரும். படிப்பி லும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பாக்கிகளில் ஒன்று, இரண்டு வசூலாகும். வியாபாரத்தை விரிவுப டுத்துவதற்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். ஆனாலும் அடிமனதில் ஒருவித பயம் இருக்கும். இந்த வேலையில் தொடருவோமோ, இல்லையோ என்றெல்லாம் அவ்வப்போது குழம்புவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! காய்கறி, பழ வகைகளால் லாபமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத்தை  மீட்பீர்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 17, 18, 19, 20, 21, 27, 28, 29,ஏப்ரல் 5, 6, 7, 8, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 22, 23 மற்றும் 24ந் தேதி காலை 9 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்:

அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment