பங்குனி மாத ராசி பலன்கள் - விருச்சிகம்


போர்குணம் கொண்ட நீங்கள், நினைத்ததை அடையும்வரை அதே நினைப்பாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் புதனும் சுக்கிரனும்
செல்வதால் தடைகள் உடைபடும். சுறுசுறுப்பாவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகளை எளிதாக முறியடிப்பீர்கள். பணவரவு திருப்திக ரமாக இருக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் 9ந் தேதி வரை பலவீனமாக இருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். முதுகு வலி, மூ ட்டு வலி வரக்கூடும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையக் கூடும். எனவே இரும்புச் சத்து, நார்ச் சத்துள்ள காய், கனிகளை உணவில் சேர் த்துக் கொள்ளுங்கள்.

சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். சிறு காயங்கள் ஏற்படக்கூடும். 10ந் தேதி முதல் ராசிநாதன் ஆட்சிபெற்று 6ல்  அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டாகும். சூரியன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். அவர்களால் மருத்துவச் செல வுகள் ஏற்படக்கூடும். அவர்களிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். அவர்கள் உங்களிடம் எதிர்மறையாக கேள்வி கேட்டாலும் நீங்கள் பொறுத்துக் கொள் வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து செல்லும். 6ல் நிற்கும் கேதுவும் 7ல் அமர்ந்திருக்கும் குருவும் உங்களுடைய திறமையை அதிகப்படுத்துவார்கள்.

உங்களுடைய தகுதியும் கூடும். அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.  மனைவிவழி உறவினர்கள்  உங்கள் புதிய திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், ஏழரைச் சனி நடப்பதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய காரி யங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். போட்டித்  தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்ல வரனும் அமையும்.

மாணவர்களே! நண்பர்களுடன் வீண் பேச்சைத் தவிர்த்து தேர்வில் கவனம் செலுத்துங்கள். கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

வியாபாரம் செழிக்கும். பற்று வரவு கணிசமாக உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டிட உதிரி பாகங்கள், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனையை உயரதிகாரிகள் ஏற்பார்கள். சிலருக்கு புது வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் நடந்தேறும். பிரபலங்களின் ஆதரவால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 15, 16, 24, 25, 26, 27, 28, ஏப்ரல் 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 19ந் தேதி நண்பகல் முதல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்:

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஆழத்துப் பிள்ளையாரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment