சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள், யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக 5ம் வீட்டில்
அமர்ந்து கொண்டு உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களையும் கோபத்தையும் பிள்ளைகளால் பிரச்னைகளையும் தந்த சூரியன் இப்போது 6ல் நுழைந் திருப்பதால் பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். அயல்நாட்டு வேலை, உயர்கல்வி போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான புதன் 5ம் வீட்டிலேயே 3ம் தேதி வரை இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.
ஆனால், ஏழரைச் சனி நடைபெறு வதால் எதிர்பாராத அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். பெரிய நோய் இருப்பது போல அறிகுறிகள் தெரியும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 18ந் தேதி முதல் 6ம் வீட்டில் சென்று மறைவதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்களை பற்றிய விமர்சனங் கள் அதிகரிக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.
எனவே, கவனமாக மற்றவர்களுடன் பேசு வது, பழகுவது நல்லது. 9ந் தேதி வரை செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். மனைவிவழியில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்துசெல்லும். 10ந் தேதி முதல் செவ்வாய் வலுவடைவதால் மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்கு வது விற்பதில் அலட்சியம் வேண்டாம். குரு 8ல் மறைந்து கிடப்பதால் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங் கள். பெற்றோரின் ஆலோசனையின்றி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் சந்தேகங்களை ஆசிரியரிடம் உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வியாபாரம் சுமார்தான், போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். ஆனால் புதன் 3ந் தேதி வரை சாதகமாக இருப்பதால் தள்ளுபடி விற்பனை மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள்.
உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கனிவாக பேசுங்கள். வேலை யில் அலட்சியம் வேண்டாம்.
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்னதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.
விவசாயிகளே! பருப்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். பம்பு செட் பழுதாகும். அக்கம்-பக்கம் பார்த்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 14, 15, 16, 22, 23, 24, 25, 31,ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 17, 18, 19ந் தேதி நண்பகல் வரை மற்றும் ஏப்ரல் 13ந் தேதி காலை 8 மணி முதல் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசியுங்கள். துப்புரவு பணியாளர்களுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment