தினை விதைத்தவன் தினையைத் தான் அறுவடை செய்ய முடியும் என்ற அனுபவ மொழியை அறிந்த நீங்கள், நாம நாலு பேருக்கு நல்லது செய்தா,
நமக்கு யாராவது உதவுவாங்க என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 6ல் அமர்ந்து கொண்டு சேமிப்புகளை கரைத்துக் கொண்டு, கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுக்கிரன் 18ந் தேதி முதல் 7ம் வீட்டில் உச்சம் பெற்று முழுபலத்துடன் அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீடு அமையும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உங்கள் ராசிநாதன் புதன் சற்றே பலவீனமாக இருப்பதால் கழுத்து வலி, தொண்டை வலி வரக்கூடும்.
உங்கள் ராசியை சூரியனும் செவ்வாயும் பார்த்துக் கொண்டேயிருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். தினமும் தியானம் செய்யப் பாருங்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் புதிய முயற்சிகள், புது முதலீடுகளில் கவனம் தேவை. லேசாக காது வலிக்கும். ஆனால், பெரிய பாதிப்புகள் இருக்காது.
அரசியல்வாதிகளே! தலைமையைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள்.
மாணவர்களே! விடைகளை எழுதிப் பாருங்கள். சில நேரங்களில் மறதி, தூக்கம் வரக்கூடும்.
கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு உதவிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் கடைக்காரருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.
உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால், விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடிவரும்.
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். நெருக்கடியிலிருந்து நீந்தி, அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 21, 22, 23, 24, 25, 29, 31, ஏப்ரல் 1, 2, 3, 4, 7, 8, 9, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 14ந் தேதி மதியம் 2 மணி முதல் 15, 16 மற்றும் ஏப்ரல் 11, 12, 13ந் தேதி காலை 8 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.
பரிகாரம்:
வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment