உன்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அமைதி தர முடியாது என்ற கீதை மொழி அறிந்த நீங்கள், தன் பிரச்னை களை தானே எதிர்கொண்டு தீர்த்துக்
கொள்வதில் வல்லவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்களின் ராசிநாதனான சூரியன் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கோபப்பட்டீர்கள். காது வலி, கண் எரிச்சல் எல்லாம் வந்தது. இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். ஆனால், சூரியனுடன், யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்திருப்பதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்திருந்த தொகை தாமதமாகக் கிடைக்கும். மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சைகள், மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் வீட்டுப் பத்திரங்கள், தங்க ஆபரணங்களை பத்திரப்ப டுத்தி வையுங்கள். கவனக் குறைவால் களவுபோக வாய்ப்பிருக்கிறது.
குருவும் 10ல் தொடர்வதால் உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் அல்லது உங்கள் பெயரை தவறாக சிலர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் யாரையும் தாக்கிப் பேசுவதோ, தூக்கிப் பேசுவதோ வேண்டாம். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் புதனும் சென்று கொண்டிருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல் லாம் எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு.
அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும்.
வியாபாரிகளே! சனியும் ராகுவும் 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் வியா பாரத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், பெரிய முதலீடுகள் எதையும் இந்த மாதத்தில் செய்ய வேண்டாம். பங்குதாரர்க ளால் பிரச்னைகள் வரும். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். இடமாற்றம் உண்டு. நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.
விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். முற்பகுதி முரண்டு பிடித்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 18, 19, 20, 21, 22, 27, 28, 29, ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 14ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் ஏப்ரல் 8ந் தேதி மதியம் 2:30 மணி முதல் 9, 10 ஆகிய தேதிகளில் எதிலும் நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment