உன்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் கடவுள் உன்னிடம் ஒப் படைப்பதில்லை என்ற சூட்சுமத்தை அறிந்த நீங்கள், சுற்றியிருப்பவர்கள்
சுகப்படவும் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு பல முக்கிய காரியங்களை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அலைச்சலை தந்து வந்த சூரியன் இப்போது 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கொஞ்சம் டென்ஷன் குறை யும். என்றாலும் தந்தையாருக்கு வீண் டென்ஷன், கை, கால் மற்றும் நெஞ்சு வலி வரக்கூடும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயும் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீண் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். எதையுமே சிக்கனமாக செய்யப் பாருங்கள். 10ந் தேதி முதல் யோகாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் நுழைவதால் உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
திடீர் பணவரவு உண்டு. சுக ஸ்தானமான 4ல் ராகுவும் சனியும் நிற்பதால் கால், கழுத்து, முதுகு மற்றும் உடல்வலி வந்துபோகும். வாகனத்தை வேக மாக இயக்க வேண்டாம். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம்.
சொத்துகள் வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள். பணப்பட்டுவாடா விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமான விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று செய்து முடிப்பது நல்லது. விலை உயர்ந்த ஆபரணங்கள், வாகனத்தை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களோடு பழகிய வர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புது வேலை அமையும்.
மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
குரு சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். செங்கல் சூளை, இரும்பு, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயி ருக்கும். 10ந் தேதி முதல் டென்ஷன் குறையும். உங்களுக்கு எதிராக இருந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.
கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.
விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். வற்றிய கிணற்றை தூர்வாரி நீர் சுரக்க வைப்பீர்கள். நிம்ம தியும் வசதி, வாய்ப்பும் கூடும் காலமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28, ஏப்ரல் 2, 3, 4, 5, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 6ந் தேதி காலை 9 மணி முதல் 7 மற்றும் 8ந் தேதி மதியம் 2:30 மணி வரை முன்கோபத்தால் பகை உண்டாகும்.
பரிகாரம்:
சிதம்பரம் தில்லை காளியை தரிசித்து வாருங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அளவு உதவுங்கள்.
0 comments:
Post a Comment