முன்னெச்சரிக்கை உணர்வுடைய நீங்கள், காலத்தை பொன்னாக மதிப்பவர்கள்! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து
கொண்டு உங்களை பாடாய்ப்படுத்தி, உங்களின் சேமிப்புகளையும் கரைத்துக் கொண்டு, தந்தையாருடன் மனவருத்தங்களையும் ஆரோக்கிய குறை வையும் தந்து கொண்டிருந்த சூரியன் 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சவாலான காரி யங்களை முடிக்கக் கூடிய தைரியம் வரும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. நாடாளுபவர் களின் நட்பு கிடைக்கும்.
வழக்குகள் சாதகமாக முடியும். இளைய சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். பெரிய நோய் இருப்பது போல நினைத்து பயந்தீர்களே! அந்த பயம் இனி நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஒரு சொத்தை தந்து விட்டு மற்றொரு சொத்து வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். கேது வலுவாக இருப்பதால் ஆன்மிகப் பெரியோர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 5ம் வீட்டிலேயே சனியும் ராகுவும் தொடர்வதால் சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப்பற்றி விமர்சித்தால் அதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இ ருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத் தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! முகப்பரு, சரும நமைச்சல் வந்து நீங்கும்.
மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். மெடிக்கல், மளிகை, தானிய வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
உத்யோகத்தில் உங்களை குறை சொன்னவர்களெல்லாம் இப்பொழுது நட்புறவாடுவார்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும்.
கலைத்துறையினரே!வேற்றுமொழிவாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை விலகும். சமயோஜித புத்தியாலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 14, 15, 16, 22, 23, 24, 25, ஏப்ரல் 1, 2, 3, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
4, 5 மற்றும் 6ந் தேதி காலை 9 மணி வரை பயணங்களின்போது கவனம் தேவை.
பரிகாரம்:
நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment