பங்குனி மாத ராசி பலன்கள் - ரிஷபம்


 இலக்கை எட்டிப் பிடிக்கும் வரை இடைவிடாமல் உழைப்பவர்களே!  முக்கியமான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் முழுக்க எல்லா
 வகையிலும் சாதித்துக் காட்டுவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சாதுர்யமாகப் பேசும் சாமர்த்திய த்தை கற்றுக் கொள்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். செவ்வாயும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு.

முன் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம்  தந்து பத்திரப்பதிவு செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடிவரும். மக ளுக்கும் நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால்  உங்களுடைய ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். கல்யாணம், காது குத்து, சீமந்தம்  என வீடு களைக்கட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

12ல் கேது நிற்பதால் அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். அயல்நாட்டுப் பயணங் கள் வரும். சனியும் ராகுவும் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் ஷேர் மூலமாக பணம் வரும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும். வழக்கில்  இருந்த தேக்க நிலை மாறும். தீர்ப்பு சாதகமாக வரும். ராசிக்குள்ளேயே குரு நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் யோசிப்பீர்கள்.  எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். உயர்கல்வியில்  ஆர்வம் பிறக்கும்.

மாணவர்களே! கணக்குப் பாடத்திலிருந்த பிணக்கு தீரும். அரசுத் தேர்வுக்கு ஆயத்தமாவீர்கள்.

முக்கியமான கிரகங்கள் 11ம் வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். வேறு சில பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
 கலைத்துறையினரே! உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். நிலத்தகராறுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுகத்  தீர்வு காண்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவதுடன் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 20, 22, 23, 25, 29, 31, ஏப்ரல் 1, 7, 8, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment