படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களே! சுக்கிரனும் புதனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதத்தில் தைரியம் கூடும்.
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். உங்களின் பூர்வ புண்ணி யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும்.
சூரியனும் செவ்வாயும் 12ல் மறைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி சின்னச் சின்ன வேனல் கட்டி, கண் எரிச்சல் வரக்கூடும். லேசாக பல் வலிக்கும். உங்கள் ராசியில் கேது அமர்ந்து உங்கள் ராசியை சனிபகவானும் பார்த்துக் கொண்டிருப்பதால் ஒரே நேரத்தில் அதிக உணவுகள் உட்கொள்ள வேண்டாம். சிறுகச் சிறுக உண்பது நல்லது. சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக இருப்பதால் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கோதுமை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு என்றாலும் 7ம் வீட்டிலேயே ராகுவும் நிற்பதால் வீண் சந்தேகங்கள், ஈகோ பிரச் னைகள் வந்துசெல்லும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். பிரபல யோகாதிபதியான குருபகவான் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியுடன் பேசி பல நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகளால் அலைச்சல், செலவி னங்கள் இருக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாதீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும்.
வியாபார விஷயமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும்.
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் நிறை வேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 18, 19, 21, 26, 27, 28, 29, 30, ஏப்ரல் 4, 5, 6, 7.
சந்திராஷ்டம தினங்கள்:
31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை-குன்றத்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment