சிறுவயதிலேயே சீர்திருத்த சிந்தனையை உடைய நீங்கள், அடிமைத்தனத்தையும் மூடப்போக்கையும் எதிர்த்து குரல் கொடுப்பீர்கள். கேது
3ம் வீட் டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பழைய நகையை தந்து விட்டு புதிதாக வாங்குவீர்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை எரிச்ச லூட்டி, கோபத்தை ஏற்படுத்தி பொறுமையை இழக்க வைத்த சூரியன் இப்போது 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம், கண் எரிச்சல் நீங்கும்.
ஆனால், 2ல் நிற்கும் செவ்வாயுடன் சூரியனும் அமர்ந்திருப்பதால் பல்வலி, காதுவலி, கண்வலி வரக்கூடும். உங்களின் பிரபல யோகாதிப தியான சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு கணிசமாக உயரும். தாம்பத்யம் இனிக்கும். நீண்ட நாட்களாக மனைவி கேட் டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி தங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உங்கள் ராசிநாதனான சனி, ராகுவுடன் சேர்ந்திருப்பதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள்.
4ம் குரு நீடிப்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம், கடன் போன்ற கவலைகள் வந்து செல்லும். பணப் பற்றாக்குறையும் ஏற்படும். வாகனத்தில் வேகமாகச் செல்ல வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். உங்கள் பெயரை சிலர் தவ றாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. நீங்களே நேரடியாகச் சென்று முக்கிய காரியங்களை முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். சகாக்களைப்பற்றி குறை கூறாதீர்கள்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். பொது அறிவுத் திறனிலும் சிறந்து விளங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கும். உடல் நிலை சீராகும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் நிலையற்ற போக்கு ஏற்படும். ஆனாலும் அச்சப்பட வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை நேரடியாக பேசித் தீர்க்கப் பாருங்கள். வளைந்து கொடுத்து வாகை சூடும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மார்ச் 14, 15, 16, 17, 18, 22, 23, 24, 25, 26, 31, ஏப்ரல் 1, 2, 3, 5, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 26ந் தேதி மாலை 4:30 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்:
மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து விட்டு வாருங்கள். ஆலய உழவாரப் பணியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment