மற்றவர்கள் செய்த கெடுதல்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். முக்கிய
கிரகங்கள் எல்லாமே இந்த மாதத்தில் சாதகமாக இருப்பதால் நீண்ட நெடு நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் சிறப்பாக முடியும். எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். பழைய கடன் பிரச்னையில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இந்த மாதம் முழுக்க உற்சா கமாக காணப்படுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சூரியன், புதன் இருவரும் சாதகமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும்.
அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதக மாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சனியும், ராகுவும் வலுவாக காணப்படுவதால் கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும்.
என்றாலும் ராசிக்கு 12ல் கேது நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சலால் அவ்வப்போது தூக்கம் குறையும். புண்ணிய தலங்களிலிருந்து பிரசாதங்கள் வரும். வழிபாட்டுத் தலங்களில் முதல் மரி யாதை கிடைக்கும். ராசிக்குள்ளேயே குரு நீடிப்பதால் இனந்தெரியாத மனக்கவலை, பயம், திடீர் திடீரென்று உணர்ச்சி வசப்படுதல் என்றெல்லாம் இ ருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு வரக்கூடும். உணவு விஷயத்தில் கட் டுப்பாடு அவசியம்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத்திறன் வளரும்.
விவசாயிகளே! அடகிலிருக்கும் பத்திரங்களை மீட்க உதவிகள் கிட்டும். எதிர்பார்த்த அரசு சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13, 14, 16, 20, 21, 22, 23, 24 மார்ச் 2, 3, 4, 10, 11, 13
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 5ந் தேதி மாலை 6 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.
பரிகாரம்:
கடலூருக்கு அருகேயுள்ள திருவஹிந்திரபுரம் தலத்தில் அருளும் ஹயக்ரீவரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment